இந்த ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகளில் ஒன்றான ஆறு ஓவர் மட்டை பந்து போட்டி இன்று காலை 10 மணியளவில் கொற்றிகோடு பழைய கோயில் மைதானத்தில் வைத்து மிகவும் சிறப்பாக நடை பெற்றது .
கடும் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டகிரிக்கெட் போட்டியானது இன்று மழை நின்று விட்டதால் நடை பெற்றது . ஏற்கனவே கிளப் உறுப்பினர்கள் மற்ற அணிகளுக்கு முறையாக தகவல் கொடுத்து போட்டிகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்தனர் . நேற்று முன்தினம் சுவரொட்டிகள் மூலம் இந்த போட்டிக்கான விளம்பரங்கள் செய்ய பட்டது . இதற்கான சுவரொட்டி செலவை முட்டை காடு விஜி அன் கோ உரிமையாளர் விஜி ஏற்று கொண்டார் அதற்காக அவருக்கு கிளப் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
இன்றைய போட்டியில் 24 அணிகள கலந்து கொண்டன இதில் 12 அணிகள் தேர்வு செய்ய பட்டு அடுத்த வாரம் தேர்வு செய்ய பட்ட அணிகளுக்கு விளையாட்டு போட்டி நடை பெறும். இந்த போட்டிகளுக்கான பரிசு தொகையும் கோப்பையும் ஆண்டு நிறைவு விழா நடைபெறும் 01-01-11 அன்று பொதுக்கூட்டத்தின் பொது வழங்க படும் .
கபடி போட்டி : 31-12-10 காலை 8 மணிக்கு
0 comments:
Post a Comment