குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று உள்ளன.
இதில் நமது அணியும் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஆட்டமானது கோட்டூர் கோணம் அணியுடன் நடைபெற்றது. இதில் நமது அணி 21 புள்ளிகளும் கோட்டூர் கோணம் அணி 5 புள்ளிகளும் பெற்றது. அதில் நமது அணி வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டது.
இதில் நமது அணி சார்பாக எட்வர்ட் சேம்சன், ஜெனித், ஆல்வின், ஜெயசீலன், சிஜோ, பெர்சிலின், விபின் ஜோஸ், ஜாண் பிறைட் ஆகியோர் விளையாடி வருகின்றனர். அணி வீரர்களை கிளப் தலைவர் சுரேஷ்குமார், கிளப் செயற்குழு உறுப்பினர் லாறன்ஸ், உறுப்பினர்கள் ஜெபர்சன், ஜாண் ரிக்சன், பிரபின் ஆகியோர் உற்சாக படுத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment